36 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
நாளையுல காள்பவரை நமதுகையில் ஒப்படைத்தார் நாட்டு மக்கள்; காளைகளைச் சிறுவர்களைக் கண்மணிபோற் காப்பதுநம் கடமை யாகும்; வேளையிது தவறிவிடின் விளைநிலத்திற் களைகலால் வேறு தோன்றா *பூளையெனப் போகாதீர் புன்மைகளை நாடாதீர் புலவர் நீவிர். பொறுப்புணர மறுப்பீரேல் புலவரெனும் பட்டத்தைப் பூணல் நன்றோ? வெறுப்புடைய பேடிக்கு வீரனெனும் பேரெதற்கு? வேலெ தற்கு? விருப்புடைய புலவர்பெயர் வேண்டுமெனிற் பெயர்க்கிழுக்கு விளையா வண்ணம் கருத்துடன் நீர் காத்திடுக கடமைகளை ஆற்றிடுக காலம் வாழ்த்தும்.
*பூளை - பூளைப்பூ. |