பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே37

14
காசுக்கா நீதி?

வீதியிற் கடைச்ச ரக்கு
      விற்பனை யாதல் போல
நீதியை விலைக்கு விற்கும்
      நிலைமையைக் கூறக் கேட்டேன்
வேதனைத் தீயால் நெஞ்சம்
      வெந்திடப் பெற்றே னந்தோ!
கோதிலா இடத்திற் கூடக்
      கொடுமையா நிகழ்தல் வேண்டும்?

மாசறி யாத நீதி
      மன்றிலும் கையூட் டென்னும்
காசுதான் தீர்ப்பை வாங்கும்
      கயமையைக் காதாற் கேட்டேன்
கூசினேன்; அவர்க்குத் தூக்குத்
      தண்டனை கொடுப்ப தன்றிப்
பேசஒன் றில்லை; பூமி
      பித்தரைச் சுமக்க லாமோ?

படித்தவர் பட்டம் பெற்றோர்
      பதவியில் உச்சம் பெற்றோர்
கெடுத்தனர் அறத்தை என்றால்
      கீழ்களை விட்டு வைத்தல்