38 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
மடத்தன மன்றோ? நாட்டில் மக்களேன்? சட்டந் தான்ஏன்? தடுத்திதை நிறுத்தா விட்டால் தாங்கிடுஞ் செங்கோல் ஏனோ? கைப்பணம் ஒன்றுக் காகக் கடமையை விற்கும் மாக்கள் பொய்ப்பிணம் போல்வர்; நாட்டில் நோய்செயும் புழுக்க ளாவர்; பைப்பணம் காட்டி விட்டால் நாட்டையும் பகைக்கு விற்பர்; செய்ப்புலக் களையால் நன்மை செழித்திட வழியே இல்லை. ஆடாது சமன்செய் கோல்போல் அவரவர் செயலுக் கேற்பக் கோடாது நடுவில் நின்று கூறலே தீர்ப்பின் பாங்கென் றேடாளுஞ் சான்றோ ரெல்லாம் இயம்புவ துணர்ந்த நல்லோர் ஊடாக இருத்தல் கண்டேன் உள்ளத்தில் அமைதி கொண்டேன் |