பக்கம் எண் :

40கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

காமுகர்சிலரால்கன்னியர்கற்புத்
தோமுறாவண்ணம்தூயநல்லுணர்வுடன்
காக்கும்பணிக்கேகாவல்நிலையம்
ஆக்கினர்என்பர்ஆகினும்உண்மை
நடப்பினைநாளிதழ்கொடுப்பதைக்காணின்
துடித்திடும்உள்ளம்வெடித்திடும்ஐயஓ!
பசித்திடும்உடலினர்பாவையர்கற்பைப்
புசித்தனர்அந்தப்புனிதநிலையத்து
கடமையுணர்வைக்காலால்நசுக்கி
உடலினைச்சுவைத்தவர்உயிரையும்பறித்தனர்
என்றசெய்திகள்எத்தனை!எத்தனை!
இமையோவிழிகளுக்கிடர்தரமுயல்வது?
இந்நிலைதொடரின்எரிமலைஒருநாள்
தன்னிலைமறக்கும்தானேவெடிக்கும்
மக்கள்பொருளும்மடவார்கற்பும்
தக்கவர்காவல்இன்றெனின்இன்றாம்;
மக்கள்கூட்டம்மனந்துடித்தெழுமேல்
தக்கோர்காவலைமறுநாள்தருமே.