பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே41

16
மருத்துவ மனையா?
வருத்தும் மனையா?

பிணியிடை உழலும் மாந்தர்
      பேணுநர் இல்லோர் நோய்கள்
தணிவுற அரசின் சார்பில்
      தருகொடை மிகுதி யாகும்;
பணியினில் திறமை மிக்க
      *பண்டுவர் பலரும் உண்டு;
மணிமணி மருந்தும் உண்டு
      மற்றும்நல் லமுதும் உண்டு.

மருத்துவ மனைகள் யாவும்
      வறியராய் வருவோர் தம்மை
வருத்துவோர் மனைக ளாகி
      வருவது காணு கின்றேன்
வருத்தமே மிகுதி யாக
      வாடிடும் மனத்த னானேன்
திருத்தவோர் மருந்தா இல்லை?
      தெரியினுந் தீர வில்லை!

வெடுக்கெனப் பேசு வோரும்
      விறைப்புடன் கனன்று தேளின்
கொடுக்கெனக் கொட்டு வோரும்
      கொடுப்பதைச் சுருட்டு வோரும்


*மருத்துவர்