பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே43

மகிழ்வுடன் சம்ப ளங்கள்
      மருத்துவ மனையிற் கொள்வர்;
புகுபிணி யாள ருக்கோ
      புகலிடம் மருந்த ரில்லம்;
மிகுபொழு தழிவ தந்த
      மேலவர்க் கில்லி லேதான்
தொகுபொருள் நோக்க மானால்
      துவண்டவர் எங்கே செல்வர்?

புதுமனை மருத்து வர்க்குப்
      பொருள்தரச் செல்வருண்டு
*1பொதுமனை புகுவ தன்றிப்
      புகலிடம் வறியர்க் கேது?
மதுவுணும் மதியர் போல
      மருத்துவர் மயங்கா ராகி
எதுசரி யெனநி னைந்தே
      ஏற்றதோர் பணியைச் செய்க.


*பொது மருத்துவமனை