பக்கம் எண் :

44கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

17
நியாய விலைக்கடை

நிறுக்கின்ற பொருள்களிலும் அளக்கின்ற
      பொருள்களிலும் நேர்மை யுண்டா?
வெறுக்கின்ற படியன்றோ விளையாடல்
      புரிகின்றார்; விலைகொ டுப்போர்
கறுத்தெழுந்தால் நியாயவிலைக் கடையென்பார்
      நியாயத்தைக் கடையில் விற்பார்;
பொறுத்திருந்து பார்த்திருப்போர் பொங்கியெழும்
      நாளொன்று புகுந்தே தீரும்.

வாங்காதார் பெயர்களெலாம் வாங்கியதாப்
      பதிந்திருக்கும்; வந்து விட்டால்
தீங்காளர் பொருள்நேற்றே தீர்ந்ததென்பார்;
      அதுவேறு தெருவிற் போகும்;
போங்காலம் வாராதோ? பொதுமக்கள்
      ஏங்குகிறார்; புல்ல ருக்கே
ஆங்காலம் ஆயிற்றா? அழிகாலம்
      மேவிற்றா? ஆரே கண்டார்!

கண்ணெதிரில் அளந்தபொருள், கடையிலவர்
      நிறுத்தபொருள் கடுகி வந்து
பின்னதனைப் பார்த்தாலோ பெற்றதெலாங்
      குறைந்திருக்கும்; பெருத்த மாயம்