46 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
விடுதலையால் என்னபயன்? வேளைதொறும் நுகர்பொருள்கள் விரைந்து வாங்கப் படுதுயரம் உறலாமோ? பகிர்ந்தளிக்குங் கடைகளிலும் பழிகள் செய்யும் கெடுதலைகள் வரலாமோ? கெடுநிலையில் மக்களினும் கிடக்க லாமோ? விடுதலையால் என்னபயன்? வெற்றொலியால் என்னபயன்? வினவு கின்றோம். விடைபகர வாயில்லை விடுதலையை நுகர்வோர்க்கு விழிகள் இல்லை இடையிலெவர் உரைத்தாலும் இருசெவியும் சரியில்லை என்னே விந்தை! குடைநிழலில் அமர்ந்திருப்போர் கூர்வெயிலின் வெம்மைதருங்கொடுமை காணார் படைநடுங்கும் பெரும்புரட்சி பரவிவரின் மக்கள்துயர் பறந்து போகும்; |