பக்கம் எண் :

50கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

‘கொள்ளைகள் கொலைகள் செய்வோர்
      பதுங்கிடும் கூடா ரம்போல்
உள்ளதே சட்ட மன்றம்’
      என்றதோர் உணர்வு தோன்றி
உள்ளமே நொந்து போனார்
      ஊரவர்; அவர்தம் நெஞ்சில்
வெள்ளமே திரண்டு வந்தால்
      வீணரின் நிலைஎன் னாகும்?

வாக்குகள் அளித்தோம் சட்ட
      மன்றமர் வாய்ப்பைப் பெற்றோர்
ஆக்குவர் நன்மை யென்றே
      ஆவலிற் காத்தி ருந்தோம்;
தாக்குதல் நடத்து கின்றார்;
      தகாமொழி பேசு கின்றார்
பூக்களில் தேனீ யில்லை
      புழுக்களே நெளியக் கண்டோம்

நலந்தரு சொற்போர் அங்கே
      நடத்துவர் என்றி ருந்தோம்
*வலம்படு மற்போர் ஒன்றே
      நடத்திட வகுத்து நின்றார்;
சிலம்பமும் ஆடு கின்றார்
      செருப்புகள் வீசு கின்றார்;
துலங்குமா சட்ட மன்றம்?
      தூவென இகழ்தற் காகும்.

தேர்தலில் அரசின் சார்பிற்
      செலவிடும் தொகைக ளெல்லாம்
யார்பணம்? மக்கள் கட்டும்
      வரிப்பண மன்றோ? யாதும்


*வலிமை