பக்கம் எண் :

54கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

21
தேர்தலாற் கண்ட பயன்

சாதிகளும் பொய்மொழியும் தன்னலமும்
      கையூட்டுந் தழைக்கும் நாட்டில்
ஏதுபயன் விடுதலையால்? என்னபயன்
      தேர்தலினால்? எத்தர் வந்தே
ஓதுகிற மொழியெல்லாம் உண்மையென
      நம்புபவர் உணர்வு கெட்டு
*மேதிகளாய் உள மட்டும் மேதினியில்
      தேர்தலினால் மேன்மை யில்லை.

சாதியைத்தான் முன்வைத்துச் சார்கின்றார்
      வேட்பாளர்; சமயம் பார்த்துச்
சாதிக்கோர் அமைச்சரெனச் சண்டைவரும்;
      சாதிக்கா சட்ட மன்றம்?
மீதிப்பேர் நிலைஎன்னாம்? வீழ்ந்தவரும்
      மேன்மைபெற வேண்டு மென்று
**சாதிப்போர் வேண்டுமலால் ***சாதிப்போர்
      தேவையிலை சட்ட மன்றில்.

உண்மைகளைச் சொல்லிவிடின் ஒருபோதும்
      வெற்றியிலை உலர்ந்து போன
மண்மதியர் முன்னின்று மனமறிந்த
      பொய்ம்மொழிகள் வழங்கி விட்டால்
பெண்மையினம் வாக்களிக்கும் பேதையர்போல்
      ஆடவரும் பின்னே செல்வர்
கண்ணிமைக்கும் முன்வெற்றி கண்டிடலாம்
      மாலையெலாங் கழுத்தில் வீழும்


*எருமைகள், *வற்புறுத்துவோர். *சாதிச்சண்டை.