56 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
22 கண்ணீர்த்துளி பொற்புடைச் செல்வி பூம்புகார்த் தலைவி கற்புடைத் தெய்வம் கண்ணகி கொழுநனைத் தீதிலாச் செம்மலைத்திருடன் எனப்பொய் ஓதிய உரைகேட் டோரா மன்னவன் கொன்றனன் என்றதோர் கொடுமொழி செவிபுக மன்றம் சென்றனள் வழக்கினில் வென்றனள்; கன்றிய நெஞ்சங் கலங்கிய கண்ணகி துன்றிய கண்ணீர்த் துளிகளைச் சிந்தினள்; அன்றவள் சிந்திய அவலக் கண்ணீர் கொன்றது மதுரைத் கொடுங்கோ லரசை அல்லல் தாங்கா தழுத கண்ணீர் மல்லல் வயல்சூழ் மாநில மன்னர் செல்வம் தேய்க்கும் செறுபடை யாமெனச் சொல்லும் திருமறைச் சொற்பொருள் மெய்யே; எளியவர் சிந்தும் விழிநீர்த் துளிகள் ஒளிவிடும் வாட்படை ஒக்கும் என்பர்; ஆம்ஆம் அத்துளி அத்துணை யாற்றல் தாமே பெற்றுள தன்மையை அறிகுவம்; படியர சோச்சும் பான்மையைப் பெற்ற முடியர சாகினும் குடியர சாகினும் கொடுங்கோ லோச்சுங் குறிப்பினைக் காட்டிற் |