பக்கம் எண் :

58கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

23
எது நாட்டுப் பற்று?

உழைப்பதே யின்றி நாடு
      வாழ்கவென் றுரத்துச் சொன்னால்
தழைத்திடும் என்று நீவிர்
      எண்ணுதல் தவறே யாகும்;
இழைத்திடுஞ் செயலொவ் வொன்றும்
      ஈன்றதாய் நாட்டைச் சாரும்;
உழைத்திட முயல்வோ மென்ற
      உணர்வுதான் நாட்டுப் பற்றாம்

உரிமையைக் கற்றுக் கொண்டீர்
      கடைமையை உதறி விட்டீர்
ஒருநிலை தாழ்ந்தும் மற்ற
      ஒருநிலை உயர்ந்தும் நின்றால்
வருபயன் ஒன்று மில்லை
      வளர்ச்சியும் வற்றிப் போகும்
*இருநிலை சமமாய் நின்றால்
      நாட்டினில் ஏற்றம் உண்டாம்.

அலுவலர் இருக்கை மேலே
      அமர்ந்திடும் நேர மென்ன?
பலவகை இதழ்கள் தூக்கிப்
      படித்திடும் நேர மென்ன?


*இருநிலை - உரிமையும் கடமையும்