பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே59

கலகல வென்று பேசிக்
      கழித்திடும் நேர மென்ன?
சொலுமிடை வேளை என்றே
      சுற்றிடும் நேர மென்ன?

அனைத்தையும் கூட்டிப் பார்த்தால்
      அலுவல்செய் நேர மென்ன?
தினைத்துணை நேர்மை யேனும்
      சேர்ந்தவர் சிந்தித் தாய்க;
பனைத்துணை உயர்ந்த கோப்பிற்
      படிந்துள தூசி பாரீர்
நினைத்தினித் திருந்து வீரேல்
      நேர்ந்திடும் நாட்டுப் பற்று

கோப்புகள் பார்க்குங் கண்கள்
      கொழுவிய பைகன் பார்க்கும்
தீர்ப்புகள் எழுதுங் கைகள்
      தினவினைச் சொறிந்து காட்டும்
காப்புயர் நிலையம் இங்கே
      களவுகட் குடந்தை யாகும்
ஏய்ப்பவர் மிஞ்சி விட்டால்
      எப்படி நாடு வாழும்?