பக்கம் எண் :

62கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

உரியவர் உழைப்போர் எல்லாம்
      உலகினை நினைதல் வேண்டும்
இருமுனை யாகத் தம்மை
      எண்ணியே பிரிந்து நின்றால்
வருமிடர் நாட்டுக் கன்றோ?
      வளமெலாம் சிதையுமன்றோ?
ஒருமுனை யாக நின்றால்
      உலகெலாம் வாழும் அன்றே.