பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே63

25
எழுத்துலகம்

சதைப்பசிக்குத் தீனியிடும் சங்கரிகள்
      கூட்டத்தார் தடித்த நெஞ்சால்
எதைக்கெடுத்தும் எழுதுகிறார் எதைக்கொடுத்தும்
      வாங்குகின்றார் இளைய நெஞ்சை;
கதைப்படைப்பாம் ஐயஓ காமத்தின்
      படைப்பைத்தான் காட்டு கின்றார்
அதைப்படிக்கும் சிறுவர்க்கும் ஆசையைத் தான்
      தூண்டுகின்றார் அனைத்தும் விட்டே

எழுத்தாளர் கைகளிலே இருப்பதெல்லாம்
      எழுதுங்கோல் என்று கூறேன்
பழுத்தோர்கள் வளர்ந்துவிடும் பண்பாட்டுப்
      பயிர்களெலாம் பாழாய்ப் போகக்
கழுத்தறுக்க வைத்திருக்கும் கருக்கரிவாள்
      என்றுரைப்பேன்; காமத் தீயில்
பழுக்காது காய்ச்சியிளம் பிஞ்சுள்ளத்தில்
      பாய்ச்சுகிற சூட்டுக் கோலாம்,

கதைக்கேற்ற படமென்பார் கவர்ச்சிதரும்
      படமென்பார் காமஞ் சொட்டும்
சதைக்கேற்ற மெருகேற்றிச் சரிந்துவிழுந்
      துணிகாட்டிச் சாயம் பூசி