64 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
எதைக்காட்டிப் பணம்பறிப்போம் எனநாட்டில் இதழ்விற்போர் இளைஞர் நெஞ்சிற் பதைப்பேற்றி வைக்கின்றார் பாழ்பட்ட நெஞ்சத்தார் பண்பே யில்லார். பரத்தமைதான் எழுத்துலகில் பரவிவரல் எவர்குற்றம்? பணத்துக் காகத் தரத்தைவிடும் எழுத்தாளர் தாமோ அத் தாள்நடத்தும் தரகர் தாமோ? உரத்தபசிக் குணவாக உவந்தோடிப் பாய்ந்ததனை உண்ணு கின்ற மரத்தமனம் படைத்தவரோ? மதியிழந்த மூவருந்தான் கூண்டில் நிற்போர். பாலுணர்ச்சிப் பசியாளர் பல்குதலும் காண்கின்றோம் பழுதுபட்ட மாலுணர்ச்சி எழுத்தாளர் மல்குதலும் காண்கின்றோம் மதியை யூட்டும் நூலுணர்ச்சி யற்றவராய் நோயுற்ற மாந்தரிவர் நுடங்கு கின்றார் காலுணர்ச்சி மானத்திற் கைக்கொளினும் போதுமடா காலம் மாறும். |