பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே65

26
கேள்வி - பதில்

குடும்பத்தார் பயில்கின்ற கொள்கைவழி
      வருமிதழாம்; கோண லின்றி
உடம்பைத்தான் காட்டுகிற ஒருத்திபடம்
      மேலுறையில்; ஒருநாள் கண்டேன்;
விடம்வைத்த பேழையென விளங்காமல்
      படித்துவிட்டேன் வியர்த்துப் போனேன்;
கெடும்பைத்தான் அதிற்கண்டேன் ‘கேள்விபதில்’
      கீழ்மையைத்தான் கிளத்தக் கண்டேன்.

மூதாட்டி அதைப்படிக்க முந்துகிறாள்
      முதியவரும் மோது கின்றார்
தீதூட்டும் அதனைத்தான் சிறியவருந்
      தேடுகிறார் தேன்நி றைந்த
*போதாட்டி உணும்வண்டாய்ப் பூவையரும்
      ஆடவரும் போய்ப்ப டிப்பார்
**ஏதாக்கும் எனநினையார் இதனாற்றான்
      குடும்பத்தார் இதழென் றாரோ

குடும்பத்தில் மறைவிடத்தில் கூடிமகிழ்
      பொழுதத்திற் குலவல் பற்றி
நடும்வித்தின் அளவேனும் நாணமிலாள்
      வழியொன்று நாடிக் கேட்பாள்;


*மலரை அசைத்து **குற்றம்