66 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
கெடும்வித்தை கற்றவனும் கேள்விக்கு விடையளிப்பான்; கீழ்மை யில்லாக் குடும்பத்தாள் குலவுவதற்குக் குறிப்புகளை மற்றவனா கொடுக்க வேண்டும்? ‘நடிகைக்குக் கணவன்யார்? நள்ளிரவில் என்செய்வாள்? நாடும் என்பாற் *படிகைக்கு வருவாளா? பாவைக்குத் தொகையென்ன? படுக்கை நொந்து விடிகைக்கு வாடுகிறேன் வினவுகிறேன் விடைசொல்லும்’ வீணன் **இந்தப் படிகைக்கு வந்ததெலாம் வரைகின்றான் ***பாழிதழார் பதிலும் சொல்வார். அழகிக்கு மணவாளர் எத்தனைபேர்? யாரிடத்தில் அவளுக் காசை? பழகுவதற் கினியவளா? படுக்கையிலே ஒருசாய்ந்து படுப்ப துண்டா? எழிலிக்கு வயதென்ன? எடையென்ன? இரவிலவள் உண்ப தென்ன, தொழிலுக்கு வாங்குகிற தொகையென்ன, உடுத்துகிற துணிக ளென்ன? அவளுக்குக் காதலன்யார்? அழகிமனத் தவ்வுணர்ச்சி அரும்பா? காயா? எவனுக்கு மாலையிட எண்ணுகிறாள், பருவமகள் என்ன வானாள்? அவளொருவன் மனைவியென ஆனபினும் மற்றவன்மேல் ஆசை வைக்குந் தவறுக்கேன் ஆளானாள்? தனதெழிலால் கவர்ச்சிமிகும் தையல் யாவள்? பத்திரிகை தாங்கிவரும் பாழ்பட்ட வினாக்களிவை; பதிலும் ஏந்தும்; இத்துறையில் வினாவிடைகள் எழுமானால் குமுகாயம் இழிந்து விட்ட
*படிவாளா, **இந்தப்படி கைக்கு வந்தது, ***பாழான பத்திரிகையாளர். |