பக்கம் எண் :

68கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

27
ஓதிக்கெட்டவன்

‘யாதும் ஊரே யாவருங் கேளி’ரென்
றோதிய மணிமொழிக் குரியவன் தமிழன்;
எனினும் இவனைக் கேளிரென் றெண்ணும்
மனிதனை மாநிலத் தியாண்டுங் காண்கிலேன்
இவன்வாழ் ஊரை எனதூர் என்று
தவறியும் நினைந்துகை தருவோ ரிலையே;
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’என்
றோதும் இவனே யாவும் பிறரால்
வருவன என்றே வாழ்நா ளெல்லாம்
தெருவெலாஞ் சுற்றித் திரிதரல் கண்டேன்;
‘சாதலும் புதுவ தன்’ றெனச் சாற்றினன்
யாதொரு செயலும் அஞ்சி யஞ்சிப்
போதெலாம் செத்துப் புலம்பினன் அவனே;
‘இனிதென வாழ்வை மகிழ்தலும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே’
எனுமொழி இசைத்தவன் இவன்றான் எனினும்
தாழ்செயல் பலவும் தயங்கா தியற்றி
வாழ்வே இனிதென மகிழ்தலும் உண்டு;
பழித்தும் இழித்தும் பகர்ந்து வாழ்வை
மறுத்துப் பேசி வெறுத்தலும் உண்டு;
‘நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்