70 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
28 திருமணச் சந்தை கனிமுதற் பொருள்கள் யாவும் விற்றிடுங் கடைக ளுண்டு நுனிபடுங் கொம்பு மாடு நுவல்விலைச் சந்தை யுண்டு மனிதனை விற்குஞ் சந்தை மற்றுமொன் றுண்டு கண்டீர்; இனிஅவன் உயர்தி ணைக்குள் இயம்புதற் குரிய னாகான் மருள்படும் மனிதன், பெற்ற மகனையே விலைக்கு விற்று வருதலைக் காணு கின்றேன் வதைபடும் மனத்த னானேன் பெருகிய குமுகா யத்திற் பிணிதரு புழுவே யானான் திருமணச் சந்தை யென்று செப்பியே திரிகின் றானே ‘பிணியெதும் அணுகா வண்ணம் பெருந்தொகை செலவு செய்தேன்; துணிமணி கல்விக் கான தொகையையும் சிறிது பாரும்; |