72 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
திட்டங்கள் பலவு ரைத்தோம் செயலிலே பயனே இல்லை சட்டங்கள் பலவுஞ் செய்தோம் தப்புகள் அகல வில்லை தட்டுங்கை யோசைக் காகத் தடபுடல் மேடைப் பேச்சு மட்டுந்தான் காணு கின்றோம் மற்றவர் வீட்டிற் காணோம். எத்தனைப் பெண்கள் தாமே சாவினை ஏற்றுக் கொண்டார்! எத்தனைப் பெண்கள் வாழ்வில் இடறிவீழ்ந் துழலு கின்றார்! இத்தனைக் கொடுமை கண்டும் இரக்கமே தோன்ற வில்லை! பித்தளை வெள்ளி தங்கம் கற்பினிற் பேசு கின்றான்! கற்பினிற் *மாற்றுக் காணுங் கண்கள் தாம் எவனுக் குண்டு? பற்பல தீமை பெல்லாம் பல்கிடச் செய்தான் யாவன்? பொற்பினர் வாழ்வை யிங்கும் பொசுங்கிடச் செய்தான் யாவன்? கற்படு மனத்தன் காசைக் கருதினன் அதனா லன்றோ? பெண்களை **அழுக வைத்தான்; பெரும்பொருள் காணாப் பெற்றோர் கண்களை அழவும் வைத்தான் காசுக்கே அடிமை யானான்;
*மாற்று - உயழ்வுதாழ்வு. **அழுக - கெட |