பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே73

மண்ணுறும் மகளிர் வாழ்வை
      மதிப்புரை செய்வ தற்குக்
கண்ணிலான் இவனுக் கெந்தக்
      கயவனிங் குரிமை தந்தான்?

அழுகையில் மகளிர் வாழ்க்கை
      ஆழ்ந்தினிப் போகா வண்ணம்
பழிபடக் குமுகா யத்தைப்
      பாழ்ங்குழி தள்ளா வண்ணம்
எழில்பெறச் செய்ய வேண்டின்
      இரக்கமே யில்லா மாக்கள்
இழிவினை அகற்ற வேண்டும்.
      இளைஞரும் விழித்தல் வேண்டும்.