பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே75

30
ஈழம் சிவந்தது.

பூணுநல் லுரிமை வேண்டிப்
      போரிடும் ஈழ நாட்டீர்
பேணுநர் இன்றி நீவிர்
      பேதுறும் நிலைமை கேட்டேன்
*வாணுனி கொண்டென் னெஞ்சை
      வகிர்ந்தது வகிர்ந்த தந்தோ!
கோணிய கொடுங்கோ லாட்சி
      குலையும்நாள் தொலைவில் இல்லை.

சுடும்படி தூண்டி விட்டுச்
      சூழ்ச்சிகள் பலவும் பேசும்
கொடுஞ்செய வர்த்த னேக்குக்
      கோலொன்று கிடைத்த தாலே
இடும்பிணக் காடா மென்ன
      ஈழத்தை யாக்கி நின்று
கடும்புலி வாழுங் காடு
      நன்றெனக் காட்டி விட்டான்.

தொட்டிலிற் றுயின்ற பிள்ளை
      தோள்களிற் கிடந்த பிள்ளை
முட்டிய வயிற்றுப் பிள்ளை
      முதுமையிற் றளருந் தாயர்


*வாணுனி - வாள் நுனி