பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே77

விடுதலைப் புலிக ளாகி
      வெந்துயர்க் குரிய ராகிக்
கெடுதலை எதிர்த்து நின்றீர்
      கிளர்ந்தெழும் நும்மைக் காக்க
உடலினால் உதவி செய்ய
      ஒருபடை எமக்கிங் கில்லை
தொடுமன வுணர்ச்சி யொன்றால்
      துணைவர்க ளாகி நிற்போம்

நம்மைநாம் உணர்வ தில்லை
      நமக்குளே பகைமை கொள்ளை
தும்மினால் வீழ்வார் கூடத்
      துரும்பென எண்ணி நம்மை
அம்மவோ தாக்கு கின்றார்
      ஆரிடம் போயு ரைப்போம்
நம்மின வுணர்வு தோன்றின்
      நரிகளா அரியைத் தாக்கும்?

எங்குள தமிழ னுக்கும்
      இடரொன்று நேர்ந்த தென்றால்
இங்குள தமிழ ரெல்லாம்
      எதிர்த்திட ஒன்றாய்க் கூடிப்
பொங்கிடின் நம்மைத் தாக்கும்
      கொம்பனும் புவியி லுண்டோ?
கங்குலிற் சிதறி விட்ட
      கருமணி யாகி விட்டோம்

சிதறிய நிலையர் தம்முட்
      சிந்தனை யுடைய நல்லோர்
பதறினர் இனத்தின் மானம்
      படைத்தவர் நொந்து நொந்து