பக்கம் எண் :

78கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

கதறினர் ஊர்கள் தோறும்
      கழறினர் உலகப் பற்றை
உதறிய துறவி தாமும்
      போர்வெறி உடையரானார்

கதிரவன் வரவு காட்டக்
      கடலிடைச் சிவத்தல் காணீர்
எதிர்வருங் கால மெல்லாம்
      இடர்பகை இனிமே லில்லை
புதியநல் வாழ்க்கை யொன்று
      பூத்தது தமிழர்க் கென்றே
அதிர்ந்தது முரச மெங்கும்
      ஆர்த்தது வெற்றிச் சங்கம்.