82 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
32 தேவ தாசி நரதசுரம் எனுங்கருவி நற்றமிழர் கண்டதனை நாடு மெச்ச ஊதுவதில் வல்லோரை உயர்ந்தஇசை வேளாளர் என்று ரைப்பர், வேதசுரர் இதுகண்டு வியர்க்கின்றார் வெறுக்கின்றார்; மேள காரர் ஈதொன்றே அவ்வினத்துக் கேற்றபெயர் மாற்றுவதேன்? என்றுஞ் சொன்னார் முப்புரியார் பிரமன்றன் முகத்துதித்தார் வேதபுரி முதல்வ ரானார் இப்படியேன் சொலல்வேண்டும்? இவர்க்கென்ன இடையூறு? சாதி யெல்லாம் அப்படியே அமைத்திடவும் அவரினத்தை உயர்த்திடவும் ஆசை கொண்டு தப்புரைகள் உரைப்பவரைத் தாள்வணங்கி வாழ்த்துவதா தமிழன் பண்பு? சாமியெனும் பெயராலே தமிழினத்துப் பெண்களுக்குப் பொட்டுக் கட்டிக் காமுகர்கள் துய்ப்பதற்குக் கருணைமொழி புகல்கின்றார் காஞ்சிப் பீடம்; |