பக்கம் எண் :

84கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

நிமிர்குடுமிப் பூதேவர் எனச்சொல்லி
      நரிச்செயல்கள் நிகழ்த்தும் கூட்டம்,
திமிர்பிடித்துப் பணம்படைத்துத் திரிகின்ற
      மனிதவுருத் திமிங்கி லங்கள்
எமதினத்தைப் பாழ்படுத்த இழிதேவ
      தாசிமுறை வேண்டு மென்று
நமநமத்துத் திரிகின்றார் நல்லதொரு
      புண்ணியமாம் நவிலு கின்றார்.

ஆண்டவற்குச் செய்கின்ற புண்ணியமென்
      றறைகின்ற ஆரி யத்தீர்
பூண்ட எழில் நிறைநல்லார் புதுநடனக்
      கலைவல்லார் புண்ணியத்தை
வேண்டுகிற உமதினத்திற் பலருண்டே
      அத்தகுநல் விறலி யர்க்குப்
பூண்டுகொளப் பொட்டொன்று கட்டிவிடும்
      புண்ணியத்தைக் கட்டிக் கொள்ளும்.

நாலுமுகன் திருமுகத்திற் பிறந்தவன்றான்
      இவ்வண்ணம் நவிலு கின்றான்
மூலமகன் தொடைப்பிறந்த மூடனுமா
      அவ்வண்ணம் மொழிய வேண்டும்?
ஏலமிட மானத்தை எண்ணுகிறான்
      இழிமகனாய் எதிரி நீட்டும்
காலதனைக் கழுவுகிறான் கடைத்தெருலில்
      நாயானான் கயவன் ஆனான்

கவருமெழில் கண்டுமனங் கலங்கியதால்
      மயங்கியதால் கயவ னான
இவனனைய மடையர்சிலர் இனுமிங்கே
      இருப்பதனால் மீண்டும் மீண்டும்