தவறுபல செய்கின்றார்; தன்மான இனவுணர்வு தழைத்து விட்டால் எவர்வருவார் நமைப்பழிக்க? இடுப்பொடிந்து போகாரே எதுவுஞ் சொன்னால்? அவ்வினத்தின் அரவணைப்புக் காசையுடன் அலைகின்றான் அதனால் தன்னை எவ்விலைக்கும் விற்கின்றான் எதுசெய்தும் வாழ்கின்றான் இனத்தின் மானம் தெவ்வரிடம் பறிபோ கத் திரிகின்றான் தன்னலமே தேடு கின்றான் இவ்வகையான் உடன்பிறந்த நோயானான் எதிரிக்குப் பாயும் ஆனான். |