பக்கம் எண் :

86கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

33
முளையிலே கிள்ளுக

தெருவிடையே நடக்குங்கால் திரிதருமோர்
      எருமையெனத் திமிர்ந்து செல்வான்
வருமொருவன் எதிர்ப்படினும் வழிவிலகும்
      உணர்வின்றி மதர்த்துச் செல்வான்
குருடனென நடுவழியிற் குறிவைத்துப்
      பித்தன்போற் குறுகிச் செல்வான்
இருபுறமுஞ் சிறுமகன்போல் எதையெதையோ
      நோக்கிடுவான் எதிரில் நோக்கான்

ஊர்திஎதிர் வரும்பொழுதும் ஊதுவதுங்
      கேளானாய் ஊர்ந்து செல்வான்
நேர்வருவோர் நேரிழையார் எனினுமவன்
      விலகாது நெருங்கிச் செல்வான்
தேர்வரும்நாள் எனவுரைத்தால் தீயனுக்கே
      வருகின்ற திருநா ளாகும்
தீர்வறியாக் கொடுமைகளைத் திருநாட்டில்
      யார்வருவார் திருத்து தற்கு?

தந்தையொடு சென்றாலும் தங்கொழுநர்
      உடன்செலினும் தைய லர்க்கிங்
கெந்தவொரு காப்புக்கும் இடமில்லை
      ஏதேதோ நேரும் தொல்லை;