110 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
மின்னிக் கிடக்கஎழில் மேல்வானிற் கண்டிருந்தேன் என்னைத் தொடர்ந்துவரும் இன்பத்தை என்னென்பேன்! தேர்போகுங் காட்சியெனச் சேர்ந்தொன்றாய் ஊர்ந்துவரும் கார்மேகக் கூட்டங் கனத்த மழைபொழியத் தோகை மயிலானேன் துள்ளும் மனத்தகத்தே ஓகை மிகவாகி ஒவென்று கூவிக் குளித்தேன் அதனால் குதித்தேன் அகத்தே களித்தேன் அதுதான் கணக்கில் அடங்காது; நீரால் நனைந்தமையால் நெஞ்சம் மிகக்குளிர்ந்தேன்; ஆரா இனிமைதரும் அவ்வுலகில் நின்றபடி நீணிலத்தை நோக்க நினைந்தேன் அடடாஓ காணலுற்ற காட்சியினாற் கண்ணின் பயன்பெற்றேன்; பச்சைப் பசுங்கொண்டல் பாவிவரும் நீள்முகட் டுச்சிப் பனிமலைகள், ஓங்கு பெருவிலங்கல், தாவிக் குத்தித்துத் தடம்புரளும் வெள்ளருவி மேவித் திரண்டுருண்டு மேதியினில் ஓடிவந்து குன்றா வளஞ்சுந்து கோலங்கள் செய்துவரும் பொன்றாப் புனலாறு, பூமகளைப் போர்த்திருக்கும் பட்டாடை என்னப் படர்ந்திருக்கும் நெற்கழனி, முட்டாது தேன்சுரக்கும் மொய்ம்மலர்சூழ் பூஞ்சோலை, சோலைக் கனிகொறிக்கத் துள்ளும் அணிற்கூட்டம், வாலைப் பிடித்திழுத்து வம்புசெயும் வானரங்கள், கூவுங் குயிலினங்கள், கோல மயிலினங்கள் யாவும் இருவிழியால் யான்கண்டேன்; கண்டவற்றை ஓவியம்போல் ஒப்பற்ற காவியத்தில் ஆக்கஎழும் ஆவலினாற் பாட்டெழுத ஏடெடுத்தேன் அவ்வேளை, குன்றக் குறமகளோ? கோலக் கடலலைகள் நின்றலையும் நெய்தல் நிலமகளோ? ஆர்கலிசூழ் தண்மருதப் பெண்மகளோ? தாவுங் கொடிமுல்லைக் கண்மருவும் ஆரணங்கோ? கண்டறியேன் ஆரணங்கோ! கட்டழகுப் பெட்டகமாய்க் கண்வருங் காரிகையாய்ப் |