புதியதொரு விதிசெய்வோம் | 115 |
போராடும் உலகத்தைச் சாய்க்க வேண்டின் புதியதோர் உலகத்தைப் படைத்தல் வேண்டும்; நீரோடு நிலம்நெருப்பு வானம் காற்று நிறைபொருள்கள் தனியுடைமை ஒருவர்க் கென்றால் வேரோடு சாய்க்கின்ற துணிவு வேண்டும்; விளையாட்டுப் பேச்சாலே பயனே இல்லை; யாரோடும் பகைவேண்டாம்; ஒன்று பட்டால் யாவுமிங்குப் பொதுவாகும் புதுமை பூக்கும் இருட்டுலகில் விடிவெள்ளி எழுதல் கண்டோம் இனியதொரு வைகறையும் வருதல் கண்டோம் சுருட்டுபவர் எவரென்று தெரிந்து கொண்டோம் தூங்கிவந்த விழியிமைகள் திறந்து கொண்டோம் உருத்துவரும் செங்கதிரோன் எழுந்து விட்டான் உலகமெலாம் தெளிவுபெற விளங்கிற் றிங்கே பொருட்டுறையில் பிறதுறையில் சமமே கண்டு புனிதமுடன் அதைஎங்கள் உயிர்போற் காப்போம். (ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டு மலரில் வெளிவந்தது) 14.3.1980 |