பக்கம் எண் :

132கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

நன்றுபடாச் சமயங்கள், பிரிவு கொண்ட
      நாலுவகை வருணங்கள், அவற்றுட் சாதி
என்றுபல ஆயிரங்கள், பகைமை கொண்டே
      இயங்கிவரும் பலகட்சி இவற்றுட் சிக்கி
ஒன்றுபடாத் தமிழ்நாடே நீதான் இங்கே
      உருப்படுமோர் நாள்வருமா? அந்நாள் எந்நாள்?
தொன்றுமுதிர் தமிழினமே அடிமை தீரத்
      துணிந்தொன்றாய்க் கூடாயோ? அந்நாள் எந்நாள்?