பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 135

தொடர்ந்துன் பணியைத் தொடங்கிடு நடந்திடு
சிந்தனை செய்நீ செங்கதிர் வழியில்
வந்தனை நீயோ வாடிக் கிடப்பது?
பெரியார் அறிஞர் பேணிய பாசறை
உரியாய் நீயோ உறங்கிக் கிடப்பது?
முறைப்படி ஆண்டநின் முத்தமிழ் நாட்டைச்
சிறைப்பட விடாமல் சிறுத்தையே விழித்தெழு!
வரிப்புலிப் போத்தே வரிந்து கட்டிநில்!
நரிச்செயல் குறுக்கிடின் மிதித்ததை நசுக்கிடு!
நாட்டில் தமிழ்மகன் நல்லதோர் ஆட்சியை
நாட்டிடத் துணைநில்! நாளெல்லாம்
மங்கலப் பொங்கலில் வஞ்சினம் பூண்டெழு!
சிங்க மகனே சினந்தெழு வுடனே!

24.12.74