136 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
16. தமிழின வரலாறு கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்; மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தனவன்; கோட்டைச் சுவரெடுத்துக் கூடும் படையமைத்து நாட்டைப் புரந்து நலந்தந்தான்; நாளும் குடிபழி தூற்றாது கோலோச்சி நல்ல படியரசு செய்து பயன்தந்து பேர்கொண்டான்; மாந்தர் உயிரானால் வேந்தர் உடலாவான் வேந்தன் உயிரானால் மாந்தர் உடலாவார்; ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைக் சுற்றிக் கொடிபொறித்தான் முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள் எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற் பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால் கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான்; காட்டைத் திருத்திக் கழனி எனவாக்கி மேட்டைச் சமமாக்கி வேளாண் தொழில் புரிந்தான்; பாராளும் காவலர்க்கும் பாட்டாளும் பாவலர்க்கும் ஏராளும் காராளன் செய்யுதவி ஏராளம்; சாவா மருந்தெனினும் தன்பால் இயைந்துவிடின் ஆ ஆ இனிதென் றவனே தனித்துண்ணான்; மற்றோர் வெறுத்தாலும் மாறி அவரிடத்துச் சற்றும் முனிபுகொளான் தாவி அணைத்திருப்பான்; நெஞ்சில் உரமும் நெடுந்தோளில் வல்லமையும் |