142 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
18. ஆரியப் பேரரசு அணிந்திருக்கும் பூணூல்கள் நூல்க ளல்ல ஆரியத்துப் பேரரசின் எல்லைக் கோடு; தணிந்துரைக்கும் அவர்மொழிகள் அணுவின் குண்டு; தருப்பைப்புல் ஏவுகணை; நெற்றி யின்மேல் அணிந்திருக்குந் திருநீறோ இடுக்கித் தாக்கும் ஆயுதங்கள்; திருநாமம் கழும ரங்கள்; நினைந்தெடுத்து விழிப்பாகக் கட்டி வைத்த நெடியமதிற் கோட்டைகளாம் நான்கு வேதம் ஆலயங்கள் அவ்வரசு செங்கோ லோச்சும் அரண்மனையாம்; சிலைகள்வெளி நாட்டுத் தூதர்; நாலுவகை வருணங்கள் பகைமு டிக்கும் நாற்படையாம்; பஞ்சாங்கம் சட்ட நூலாம்; மேலுலகம் புராணங்கள் சாத்தி ரங்கள் மேற்படியார் விளம்பரஞ்சிசெய் துறைக ளாகும்; மாலுடைய மதம்நடன மங்கை யாகும்; மற்றுமுச்சிக் குடுமியொரு கொடியே யாகும். ஆலமரம் அரசமரம் இவற்றின் கீழே அமர்சிலைகள் சிற்றரசாம்; உடைக்குந் தேங்காய் பாலொடுநெய் ஊர்மக்கள் கப்ப மாகும்; பறையோசை மந்திரங்கள் அரசின் ஆணை; மேலுலகம் கீழுலகம் சிறைக ளாகும்; மேதைகள்போல் எழுதிவருஞ் செய்தித் தாள்கள் வேலொடுவாட் படைகளாகும்; காஞ்சிப் பீடம் வெற்றிபெற மறைசூழும் மன்ற மாகும். |