புதியதொரு விதிசெய்வோம் | 143 |
பகுத்துணரும் ஆற்றலிலார் மயக்கங் கொண்ட பத்தியினால் தம்மைத்தான் அறிய கில்லார் தொகுத்திருக்கும் மடமைக்குள் மூழ்கி நிற்பார் தொழும்பரிவர் குடிமக்கள்; மனுநூ லாளர் வகுத்திருக்கும் பிறப்பிறப்பு வரிக ளோடு மன்றல்வரி குடிமக்கள் செலுத்தி நிற்பர்; பகைத்தெவரும் எழுவரெனில் அழகு மிக்க பராசத்தி ஏவிடுவர் பகையும் வீழும். வஞ்சனையின் வலைவிரிக்கும்; அறிவு தேய்ந்த வாயில்லா அரிகளெல்லாம் வந்து வீழும்; நஞ்சனைய தந்திரத்தால் மயக்கு கின்ற நாத்திறத்தால் ஏமாற்றி ஆட்சி செய்யும் பஞ்சணைந்த அரியணையில் ஏறி நின்று பாமரரைப் பொம்மையென ஆட்டி வைக்கும்; துஞ்சுமன மூடரிங்கு வாழும் மட்டும் தோற்காது வெற்றிபெறும் ஆரி யந்தான். 30.3.1984 |