பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 149

யானைகட்டிப் போராடித்து விளைச்சல் கண்டு
      யாவருக்கும் நெல்லளந்த தமிழர் நாட்டில்
பானைகட்டிப் போரடிக்க வந்த பேர்க்கும்
      படியரிசி யளப்பதற்கு முயலும் போது
மோனைகட்டி எதுகையிட்டுக் கவிதை யாத்து
      முழுமனத்தாற் பாராட்ட மனமே யில்லார்
சேனைகட்டி எதிர்க்கின்றார்; சிறுமை யன்றோ?
      செந்தமிழர் நாட்டுக்கு நன்மை யாமோ?

பாரிவிழா பறம்புமலை
28.4.1969