பக்கம் எண் :

150கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

20. ஒருமைப்பாடு

ஒருமைப்பா டென்றொருசொல் உரைக்கக் கேட்டோம்
      ஒற்றுமைஎன் றொருசொல்லும் மொழியக்கேட்டோம்
இருமைக்கும் உள்ளதொரு வேறு பாட்டை
      இனியமனம் படைத்தவர்கள் உணர்தல் வேண்டும்;
ஒருமைப்பா டென்றுரைத்தால் ஒன்று வாழும்
      ஒற்றுமை என்றுரைத்தாலோ பலவும் வாழும்
உரிமைக்குக் குரல்கொடுப்போம் பவவும் வாழ
      உறவுக்குக் கைகொடுப்போம் நாட்டைக் காக்க.

2.3.1975