புதியதொரு விதிசெய்வோம் | 153 |
23. எங்கே தமிழன்? தமிழனைக் காணவில்லை-ஈன்ற தாயகம் முழுவதும் போயெதிர் தேடினும் - தமிழனை இமிழ்கடல் வரைப்பில் எங்கணும் சென்றான் இசையுடன் தன் கொடி ஏற்றினன் என்றார் - தமிழனை இந்துவென் றொருவன் என்னெதிர் வந்தான் இசுவாம் எனவோர் இளைஞன் சொன்னான் வந்துமற் றொருவன் கிறித்தவன் என்றான் வருபவர் ஒவ்வொரு வகைவகை சொன்னார் - தமிழனை பார்ப்பான் முதலி பஞ்சமென் செட்டி பள்ளொடு பறையெனப் பலபேர் சுட்டி ஆர்த்தார் இனும்பல் லாயிரங் கொட்டி ஆதலின் என்மனம் அலைந்தது சுற்றி - தமிழனை 3.12.1982 |