154 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
24. தமிழனா? இந்தியனா? எடுப்பு இந்தியன் என்றொரு தமிழ்மகன் சொன்னால் அவன்தான் இங்கே ஏமாளி-கூத்தன் இயக்கிட இயங்கும் கோமாளி - இந்தியன் தொடுப்பு உந்திய உணர்வால் தமிழனென் றேதனை உரைப்போன் மானம் உயர்ந்துள திறனாளி- இந்தியன் முடிப்பு அவனே இந்தியத் தமிழனென் றிசைத்தால் அடிமையென் றெழுதிய முறியாளி புவிமிசைத் தமிழ இந்தியன் என்றே புகல்பவன் சரிநிகர் சமனாளி- இந்தியன் எப்பெயர் சூடுதல் ஒப்புமென் றாய்ந்தே ஏற்றிட முனைபவன் பொறுப்பாளி எப்பொருள் கூறினும் எவ்வெவர் கூறினும் மெய்ப்பொருள் காண்பவன் அறிவாளி- இந்தியன். 7.5.1987 |