புதியதொரு விதிசெய்வோம் | 155 |
25. என் குறிக்கோள் தமிழன் எனும்பெயர் சாற்றுங் காலைக் குமையா உரிமை கொள்ளுவன் யானே; இந்தியன் எனும்சொல் இயம்புங் காலை உந்திய நட்பை உணருவன் யானே; உலகம் எனும்பெயர் ஒதுங் காலைக் கலகமில் லன்பைக் காணுவன் யானே; விரிமனம் எனச்சொல்லி உரிமை யிழந்து பிறபிற நினையிற் பேதையன் யானே. 1.2.1988 |