162 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
மீட்டியநல் யாழிசையைக் கேட்டு மைந்தன் மெய்ம்மறந்தொன் மடியமர்ந்து சிலைபோல் தோன்ற, ஊட்டியநற் சுவைமறந்து செயல்ம றந்தே உலகினையும் மறந்திருந்தேன்; யாழின் ஓசை காட்டியஓர் உலகினில்நான் மிதந்து வந்தேன்; கனவுலகம் நனவுலகம் அறிய கில்லேன்; பாட்டிசைக்கு மயங்காத மாந்த ருண்டோ? படைத்தசெவிப் பொறிப்பயனைப் பெற்றேன் பெற்றேன். விழிப்பொறிக்கு விருந்தளித்தாய் காட்சி தந்து; வீணையினால் விருந்தளித்தாய் செவிப் பொறிக்குக், குழைத்தெடுத்த பச்சரிசிப் பொங்கலிட்டுக் கூர்சுவையால் வாய்ப்பொறிக்கு விருந்த ளித்தாய்; தெளிர்த்தநரம் பிசைவிடுத்துக் கொவ்வைவாயின் தேன்மொழியால் நின்குரலாற் பாடி யின்பம் திளைத்திருக்கக் கருத்தினுக்கும் விருந்த ளிப்பாய் செங்கதிர்க்கு வாழ்த்திசைப்பாய் மாதே என்றேன். குழைவித்த மென்னரம்பின் யாழ்விடுத்துக் குரலிசையால் இனிமையினைச் செவியில் வார்த்தாள், மழைநிகர்த்த குழலிதன்வாய் மலர்த்துச் செந்தேன் மாரியென இசை பொழிந்தான்; முன்னர் மீட்டுக் கழைபிழிந்த சாறெனுமா றிசைத்த யாழ்தான் கலக்கமுறத் தோல்விபெற வென்றி கொண்டாள்; கழைகொடுத்த குழலிசையோ எனம யங்கக் களிகூர மிடற்றிசையால் நனையச் செய்தாள் |