புதியதொரு விதிசெய்வோம் | 167 |
இனவுணர்வு நமக்குள்ளே எழுந்துவிடின் நமைப்பகைமை என்ன செய்யும்? இனநலமே குறியாக எப்பொழுதும் அப்பகைவர் இயங்கு கின்றார்; கனவுலகில் திரிகின்ற தமிழ்மகனே உண்மைநிலை கண்டு கொள்வாய்; உனையொன்று வேண்டுகிறேன் உன்னினத்தை முன்னேற்ற ஒன்று சேர்வாய் தமிழரெலாம் ஒன்றானார் தமிழர்க்குப் பகைவரெலாம் தாழ்ந்து போனார் அமிழ்தனைய இம்மொழியை அகம்மகிழ என்செவியில் ஆரு ரைப்பார்? இமிழ்கடல்சூழ் இவ்வுலகில் எந் தமிழர் சாதியினை எரித்தே விட்டார் தமிழனந்தான் இனியுண்டு தலைநிமிர்ந்து வாழ்வரெனச் சாற்று வார்யார்? |