170 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
32. சான்றோர் செய்த பிழை கற்றில ராகினும், மற்றுயர் குணநலன் அற்றன ராகினும், அரும்பொருள் பெற்றவர் முற்றநன் மதிப்பினைப் பெற்றிடல் காண்குதும்; தமக்கென ஒருதொழில் தாங்கில ராகி உமக்கும் எமக்கும் உருகுதல் போல மயக்குறப் பேசி மறுநாள்மாறி நாளொரு மேடையில் நடைபயில் அரசியல் வாதியர் தமக்கும் வழங்குவர் மதிப்பு; தடவிய பொடியால் தகதக முகத்து நடிகர் தமக்கும் நன்மதிப் பளிப்பார்; ஆன்றவிந் தடங்கிய சான்றோர் தமக்கோ ஏன்தர மறந்தனர் ஏற்றநன் மதிப்பை? பெரும்பொருள் தேடா திருந்தனர் அது பிழை; அரசியல் ஒந்தி ஆகிலர் அது பிழை; பொடியால் உடையால் புதுமெரு கேற்றும் நடிகர் ஆகவும் நயந்திலர் அதுபிழை; இற்றை நிலையினை எண்ணுங் காலை பற்றி எரியும்என் பாழ்படு நெஞ்சே. 27.4.1978 |