172 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
தடியடி குத்து வெட்டு, தையலர் கற்பை யுண்ணுங் கொடியரின் செயல்கள், கொள்ளை கொலைகளுங் கூட லன்றி விடியலா காணல் கூடும்? விழிகளா துயிலும்? எங்கும் இடியொலி கேட்ப தன்றி இன்னொலி யாதுங் கேளேன். நாட்டினைக் கருத வில்லை நலங்களும் விளைய வில்லை வீட்டினைக் கருது வோரால் வேறென்ன விளையு மிங்கே; கேட்டுணர் வுடையோர் ஆண்டால் கீழ்மைதான் விஞ்சும் இங்கே நாட்டுணர் வுடையோர் வந்தால் நலமெலாம் பொங்கும் பொங்கும் |