பக்கம் எண் :

174கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

சாதிக்கு நீகொடுத்த சாட்டையடி
      போதாதோ? தமிழர் இன்னும்
மேரிதிக்கொண்ட டழிகின்றார்; முற்போக்குப்
      பாதைசெல முயல வில்i;
*மேதித்தோல் போர்த்தவுடல் மேதியினிற்
      பெற்றனரோ? மேடை யேறிப்
போதிக்க மட்டுமவர் மறப்பதில்லை
      பாழாகிப் போன மாந்தர்.

எவன்விட்டான் சாதியினை? எவன் செய்தான்
      கலப்புமணம்? எவனோ எங்கோ
தவறிவிட்டான் செய்துவிட்டான் தவிக்கின்றான்;
      மற்றவனோ சாதி தன்னைச்
சுவர்வைத்துக் காக்கின்றான் சொல்வீரங்
      காட்டுகிறான் துணிய வில்லை;
இவன்கெட்ட கேட்டுக்கு நூற்றாண்டு
      விழாவெடுக்க எழுந்தும் விட்டான்.

பாவேந்தர் நூற்றாண்டு
விழாவுக்குப் பாடியது


* மேதி - எருமை