18 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
5. உயிர் கொடுப்போம் “இந்திமொழி பொது மொழியா ? தகுதி என்ன இருக்கின்ற தம்மொழிக்கு? குயில்கள் கூவும் கொந்தலிழும் மலர்ச்சோலை தமிழர் நாடு; கோட்டானுக் கங்கென்ன வேலை?'' என்று செந்தமிழும் பிறமொழியும் நன்கு கற்றோர் சீர்தூக்கி நன்குணர்ந்து மறுத்து ரைத்தார்; எந்தவழி இந்திமொழி வந்த போதும் ஏற்பதிலை என்றெல்லாம் எடுத்துச் சொன்னார். அரசியலில் மூதறிஞர் மறுத்துச் சொன்னார் ஆய்வுரைகள் அறிவுரைகள் எழுதிப் பார்த்தார்; முரசொலிக்கும் போர்க்களத்தில் நின்று நாளும் முழக்கமிடும் பேரறிஞர் எதிர்த்து நின்றார்; உரமிகுந்த அறப்போர்கள் பல நடாத்தி உயிர்ப்பலிகள் பலகொடுத்தார்; எல்லாம் கண்டும் இருள்மதியர் இந்திவெறி கொண்ட மாந்தர் இன்றுவரை கேளாராய் உலவு கின்றார். விரலைந்தும் தனித்தனியே இயங்கி நிற்கும் வேலேந்தும் பொழுதிலவை இணைந்து நிற்கும்; தரமறந்த உரிமையுடன் மாநிலங்கள் தனித்தனியே இயங்கிவரும்; பகைவ ருங்கால் உறவுணர்ந்து தோள்தந்தே இணைந்து நிற்கும்; ஒற்றுமைஎன் றிதனைத்தான் உரைப்பர் மேலோர்; ஒருமைஎனும் பெயராலே விரல்கள் ஐந்தை ஊசியினால் தைப்பதற்கு முனைவா ருண்டோ? |