புதியதொரு விதிசெய்வோம் | 185 |
தட்டி எழுப்பிய தலைவர்கள் நிலைமண்டில ஆசிரியப்பா தமிழகமாந்தரைத்தட்டிஎழுப்பிய தமிழினத்தலைவர்தம்புகழ்பாட வேட்டெழுந் திங்கேபாட்டரங்கமைத்துக் கூட்டிமகிழ்ந்தீர்,கூப்பினேன்கைகள்; எட்டுணையாகினும்எழுமுணர்விலராய்ப் பட்டமரமெனப்பள்ளியிற்கிடந்து கெட்டழிந்தோரைக் கிளர்ந்தெழுந்திங்கே தட்டியெழுப்பியதலைவர்பற்பலர்; பாரோர்இகழப்பான்மைகள்கெட்டும் ஒராதிருந்தேஉறங்கும்மாந்தரைப் ‘பாமரர்விலங்குகள்பழுதுறுசெவியர் ஊமையர்குருடர்’என்றெலாம்உரைத்துத் திட்டிஎழுப்பியதிண்ணியர்,நம்மைச் சுட்டியசொற்கள்சுடவேஇல்லை; சூடுசுரணைஅனைத்துந்தொலைத்து நீடுதுயிலில்நிலைத்திருந்தோரை “மடமையில்உழல்வீர்மானம்எங்கே? கடையர்என்றுமைக்கழறுதல்கேளீர்; சாதிகள்எத்தனை!சமயம்எத்தனை! ஓதியஇவற்றைஉறுதிப்படுத்தும் வேதம்எத்தனை!வீணிற்படைத்த கதைகள்எத்தனை!கடவுளும்எத்தனை! |