பக்கம் எண் :

32கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

நாட்டினில் ஒற்றுமை நாடுகிறோம் - அதை
      நாளும் நினைந்திங்குப் பாடுகிறோம்
நாட்டைப் பிளந்திட நாடுகிறாய் - அது
      நன்மை எனத்திட்டம் போடுகிறாய்!

போவென வாயிலை மூடுகிறோம் - வரப்
      பொந்துள தோவென நாடுகிறாய்
சாவென்ற போதிலும் நாடவிடோம் - எம்
      சந்ததி யின்மனம் வாடவிடோம்

நில்லடி நில்லடி இந்திப்பெண்ணே - உன்
      நெஞ்சினில் என்ன துணிச்சலடி!
செல்லடி செல்லடி இந்திப்பெண்ணே - இதைச்
      சிந்தையில் வைத்திரு சென்றபின்னே.

20.2.1979