13. ஒன்றே நினைப்பீர்! பேசுங் கலையாவும் பேணிவந்த முன்னவன், தான் பேசும் மொழிக்குப் பெருமை தரும்வகையில் எண்ணும் எழுத்தும் இயற்றி நமக்களித்தான் கண்ணென் றவைதம்மைக் காத்து வளர்த்தோமா? கீழ்வா யிலக்கம் கிழடாகிப் போனதென்று தாழ்வாக நாமதனைத் தள்ளிக் கிடத்திவிட்டோம்; மிஞ்சும் எழுத்தேனும் விஞ்சுமா என்றாலோ அஞ்சும் நிலைக்குத்தான் ஆளாகி நிற்கின்றோம்; நாடாளும் நல்லோர் நடந்துவரும் போக்குத்தான் கேடாகும் என்று கிறுகிறுத்து வாடுகின்றோம்; நாட்டில் ஒருமைதனை நாட்ட நினைவோர்தாம் கேட்டில்விளை யாடக் கிளர்ந்தெழுந்தால் என்செய்வோம்! `உங்கள் எழுத்தை ஒதுக்கிவிட்டு மேற்கோட்டில் தொங்கும் எழுத்தைத் துணைக்கொள்; ஒற்றுமையைக் கண்டு விடலாம்' எனத்தான் கதறுகின்றார்; துண்டு படத்தான் துணைசெய்யும் இக்கதறல்; ஆள்வோர் கருத்தும் அதுவாயின் ஆகட்டும்! வீழ்வோர்தாம் வீழட்டும்! வாழ்வோர்தாம் வாழட்டும்! தாய்மொழியின் ஆக்கந் தடையுறுதல் நாம்காணின் காய்மொழிகள் வேண்டா கனிமொழிகள் சொல்லிடுவோம் கேட்டால் நிலைவாழும் கேளாரேல்...? நான்சொன்னால் பாட்டின் தரங்குறையும் பார்த்து முடிவுசெய்க! கட்சி சமையம் கடந்துதமிழ்த் தொண்டுசெய |